தற்போதைய செய்திகள்

மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மும்பை அருகே மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்த‌தில், 7 வயது சிறுவன் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் பகுதியான பல்கார் மாவட்டம் வசை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மின்சார ஸ்கூட்டருக்கான பேட்டரியை சார்ஜ் போடப்பட்டுள்ளது. அப்போது பேட்டரி திடீரென வெடித்த‌தால், அருகில் இருந்த ஷபீர் ஷாநவாஷ் என்ற 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான். 80 விழுக்காடு தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்