தற்போதைய செய்திகள்

5 வயது குழந்தைக்கு திமுக கவுன்சிலர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - கடலூர் எஸ்பி-க்கு பறந்த பரபரப்பு கடிதம்

தந்தி டிவி

விருத்தாச்சலத்தில், 5 வயது குழந்தைக்கு திமுக கவுன்சிலர் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தை, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பள்ளியில் படிக்கும் 5 வயது குழந்தைக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்தப் பள்ளியின் நிர்வாகி பக்கிரி சாமி கைது செய்யப்பட்டார். தற்போது இந்த சம்பவத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த சம்பவத்தில் மற்ற சிறுமிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்றும், விசாரணை எந்த ஒரு தலையீடு இன்றி சுதந்திரமாக நடத்த வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை செய்து 5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி