தற்போதைய செய்திகள்

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி இடம் - சிக்கிய 2 சார் பதிவாளர்கள்

தந்தி டிவி

சிவகங்கையில், போலி ஆவணம் மூலம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை பத்திரப்பதிவு செய்த புகாரில், 2 சார் பதிவாளர்கள் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கருப்பன் என்பவருக்கு, திருவேலங்குடி கடம்பாவனத்தில், ஐந்தரை ஏக்கர் நிலம் இருந்தது. 2020-ம் ஆண்டு குடும்பத்தோடு மலேசியா சென்று விட்டு, 2022-ம் ஆண்டு சொந்த ஊர் அவர் திரும்பியுள்ளார். அப்போது, தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆதார் அட்டை தயாரித்து, ஆள்மாறாட்டம் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதுகுறித்து காவல்துறையில் கருப்பன் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், புகாருக்குள்ளான காலகட்டத்தில் சார் பதிவாளர்களாக இருந்த சரவணன் மற்றும் சங்கரமூர்த்தி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்