தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையை அடுத்த எழுத்துர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும், ராஜசேகர் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது. கோவிந்தன் தனது தம்பிகள் கலியமூர்த்தி சங்கர் மற்றும் கோவிந்தன் அம்மா உண்ணாமலை கோவிந்தன் மனைவி சுசிலா ஆகியோருடன் தனது நிலத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது ராஜசேகர் வழிமறித்து பிரச்சனை ஏற்படுத்தி அசிங்கமாக திட்டியதுடன் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் உண்ணாமலை, சுசிலா, கலியமூர்த்தி சங்கர் ஆகிய நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இரு தரப்பினர் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்