மொடக்குறிச்சி அருகே அமைந்துள்ள, 39 அடி காலபைரவர் சிலைக்கு, உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே அவல்பூந்துறை பகுதியில் உலக புகழ்பெற்ற பைரவர் கோவில் உள்ளது.
இங்கு, உலகில் எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது, 39 அடி உயரத்தில் கால பைரவர் சிலை மிக பிரமாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த கால பைரவர் சிலைக்கு யூனிக் உலக சாதனை விருது, அமைச்சர் முத்துசாமி மற்றும் ஆலய பொறுப்பாளர் விஜய் சுவாமி முன்னிலையில் வழங்கப்பட்டது.