தற்போதைய செய்திகள்

35 துண்டுகளான லிவ் இன் காதலி - அடுத்த நாள் காதலன் என்ன செய்தான்? - தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

டெல்லியில் ஷ்ரத்தா கொலை வழக்கில் கொலையாளி அப்தாப் குறித்து அதிர்ச்சியளிக்கும் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

லிவ் இன் உறவில் இருந்த காதலி ஷ்ரத்தாவை அப்தாப் என்ற இளைஞர் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் கொலையாளி அப்தாப்பை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷ்ரத்தா கடைசியாக அணிந்திருந்த உடைகளை ரத்தக் கறைகளோடு குப்பையில் அப்புறப்படுத்தியதாக அப்தாப் தெரிவித்துள்ளார்.

மேலும் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் ஷ்ரத்தாவுடையது தானா? என்பதை கண்டறிய எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனை முடிவுகள் வர 15 நாட்கள் ஆகும் என்றும், 3 வருடங்களுக்கு முன்பாக அப்தாப், ஷ்ரத்தா சந்தித்த டேட்டிங் செயலியில் இருந்து விபரங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த அடுத்த நாள் அதாவது மே 19ஆம் தேதியன்று அப்தாப் ஃ​ப்ரிட்ஜ் வாங்கியதற்கான பில் ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் ஷ்ரத்தாவின் வங்கிக்கணக்கில் இருந்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை அப்தாப் எடுத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை