தற்போதைய செய்திகள்

கடும் குளிரால் உறைந்த நிலையில் 3 சிறுவர்கள் மரணம் | LONDON

தந்தி டிவி

பிரிட்டனில் ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் ஏரியில் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்; மேலும் ஒரு சிறுவன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பிரிட்டனில் நிலவும் கடும் குளிரில் வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவும் பனிமழையும் அதிகரித்துள்ளது. லண்டன் நகரில் தரையடி ரயில்சேவை ஆங்காங்கே நிறுத்தப்படும் அல்லது தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கதகதப்புக்கு அவசியமான குளிர்கால அவசரப் பயன்பாட்டு நிலக்கரி ஆலைகளை இயக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில்சேவை நிறுவனங்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த நிலையில், மத்திய இங்கிலாந்தின் சோலிஹல் பகுதியில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பல சிறுவர்கள் விழுந்துள்ளனர். அவர்களில் நான்கு பேரை அவசர சேவைப் பிரிவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஒரு சிறுவன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறான்.

சிறுவர்கள் விழுந்து இறந்துபோன ஏரிக்கருகே அந்த வட்டார மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்

TVK | ரிஜெக்ட் செய்யப்பட்டது வேட்புமனு.. பேரதிர்ச்சியில் தவெகவினர்

Congress List | லிஸ்டில் மாணிக்கம் தாகூர்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

DMK | ஸ்டார் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு