தற்போதைய செய்திகள்

குளம் போல் தேங்கிய 2.5 டன் எண்ணெய்... அதிர்ச்சியில் அதிகாரிகள்

தந்தி டிவி

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் குளம் போல் தேங்கி நின்ற எண்ணெய் கசிவு முழுவதுமாக அகற்றப்பட்டது.

சென்னை துறைமுகத்திலிருந்து திருவெற்றியூர் எண்ணெய் நிறுவனத்திற்கு, பூமிக்கு அடியில் உள்ள ராட்சதக் குழாய்கள் மூலம் காசிமேடு மீன் பிடி துறைமுகம் வழியாக செல்கிறது.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் இரவு திடீரென குழாய்களில் விரிசல் ஏற்பட்டதால், எண்ணெய் முழுவதுமாக வெளியேறி கப்பல் கட்டும் தளத்தில் குளம் போல் தேங்கியது.

இதை பணிக்கு வந்த மீனவர்கள் கண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுமார் 2.5 டன் அளவில் குளம் போல் தேங்கி நின்ற எண்ணெயை உடனடியாக அகற்றும் பணியில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வாலிகளை வைத்து முழுவதுமாக எண்ணெய் கசிவை அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்