தற்போதைய செய்திகள்

"2000 ரூபாய் நோட்டு செல்லாது".. தொழிலதிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர் தகராறு..

தந்தி டிவி

கோவை அருகே உள்ள சுங்கச்சாவடியில், சுங்கசாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணியூர் சுங்கச்சாவடியில் தொழிலதிபர் ஒருவர், கட்டணம் செலுத்துவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அளித்துள்ளார்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாங்க மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பொதுமக்கள் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தது யார் என சுங்கச்சாவடி ஊழியரிடம் கேள்வியெழுப்பினர்.

இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டை பெற்று கொண்டார். இந்த சம்பவத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்