தற்போதைய செய்திகள்

"ரூ.100-க்கு 200 மில்லி பெட்ரோல்.. என்னங்க இது அக்கிரமமா இருக்கு" - பங்கை ரவுண்டு கட்டிய வாகன ஓட்டிகள்

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், ராஜசேகரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். ஆனால் 200 மில்லி பெட்ரோல் மட்டுமே நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பங்க் ஊழியரிடம் கேட்டபோது, 100 ரூபாய்க்கான பெட்ரோல் நிரப்பப்பட்டதாக, மீட்டர் காட்டுவதாக கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜசேகருக்கு ஆதரவாக சிலர் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மெக்கானிக்கை வைத்து சோதித்த பார்த்தபோது, வாகனத்தில் 200 மில்லி லிட்டருக்கு மேல் பெட்ரோல் இல்லை. இதனால் விவகாரம் தீவிரமடைந்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பெட்ரோல் பங்க் நிர்வாகம், இனி இதுபோன்று நடக்காது என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்