தற்போதைய செய்திகள்

கைநழுவி போன 2 உலகக்கோப்பைகள்.. கூண்டோடு தூக்கி அடித்த BCCI - அதிரடி மாற்றம்..!

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சேத்தன் சர்மா தலைமையிலான வீரர்கள் தேர்வுக் குழுவைக் கூண்டோடு கலைத்து உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது.

இந்த தொடரில் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு சரிவர செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, மண்டல வாரியான தேர்வுக்குழு தலைவர்கள் ஹர்வீந்தர் சிங், சுனில் ஜோஷி, தெபாஷிஸ் மொஹந்தி ஆகிய 4 பேரை தேர்வுக்குழுவில் இருந்து அதிரடியாக பிசிசிஐ நீக்கி உள்ளது.

புதிதாக 5 தேர்வுக் குழு தலைவர் பதவிகளுக்கு, வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்