தற்போதைய செய்திகள்

ராணி வளர்த்த 2 செல்ல நாய்கள்... அவர்கிட்ட ஏன் கொடுக்குறீங்க?... கொந்தளிக்கும் மக்கள்

தந்தி டிவி

 ராணி எலிசபெத் வளர்த்து வந்த இரு செல்லப்பிராணி நாய்கள், இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத், ராணியாக இருந்த காலத்தில் 30 நாய்களை வளர்த்துள்ளார்.

கணவர் பிலிப் காலமான பிறகு, தனது மகன் ஆண்ட்ரூவிடமிருந்து இரண்டு நாய்களை பரிசாக பெற்ற ராணி எலிசபெத் அதனை வளர்த்து வந்தார்.

தற்போது ராணி காலமான நிலையில், அவர் வளர்த்து வந்த நாய்கள் இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர், ஆதரவாகவும் ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

62 வயதான இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் உள்ளதால், இது தற்போது பேசு பொருளாகி உள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்