தற்போதைய செய்திகள்

ரூ.3 ஆயிரம் EB BILL-க்கு 17 ஆயிரமா..?" கேட்டா போலீஸ்கிட்ட புடிச்சு கொடுத்திடுவேன்னு மிரட்டுறாங்க" சென்னை பெண்ணுக்கு நேர்ந்த நிலை

தந்தி டிவி

3 ஆயிரத்து 380 ரூபாய் மின் கட்டணத்திற்கு, 17 ஆயிரம் ரூபாய் அபராதமா என மின்வாரிய அலுவலகத்தில் வயதான பெண்மணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ரமணி என்பவர் வீட்டிற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின் பயன்பாட்டு அடிப்படையில் ரமணிக்கு ஏப்ரல் மாதத்தில் 3380 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரால் குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில், மின்வாரிய அதிகாரிகள் இணைப்பை துண்டிக்கவில்லை. இதனிடையே ரமணிக்கு ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் 4 ஆயிரத்து 750 ரூபாய் வந்த நிலையில், அவர் மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகம் சென்றபோது 17 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி