தற்போதைய செய்திகள்

போலீசார் தாக்குதலில் 15 வயது ஈரானிய பள்ளி மாணவி மரணம் - ஈரானிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தந்தி டிவி

15 வயதேயான ஈரானிய பள்ளி மாணவி பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண், கவால்துறையினர் தாக்கியதில் மரணம் அடைந்தார்.

மாஷாவின் இறப்புக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், அர்டபில் நகரிலுள்ள ஷகித் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முற்பட்டனர்.

அப்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் அஸ்ரா பனாஹி என்ற 15 வயது மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஈரானிய ஆசிரியர் சங்கம் இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்