தற்போதைய செய்திகள்

பைக்கை மறித்து தொடர் வழிப்பறி.. 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய இருவர் - கடலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தாக்கி, வழிப்பறி செய்ததுடன், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். • வேப்பூர் அருகே விளம்பாவூர் கிராமம் அருகே, மர்மநபர்கள் இருவர், சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். • கள்ளக்குறிச்சியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். • அவர்களது வாகனத்தை வழிமறித்த 2 பேர், உறவினரை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். • மேலும், 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற கும்பல், செராமிக் சாலை அருகே வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால், சிறுமி அணிந்திருந்த கொலுசை மட்டும் அந்த கும்பல் பறித்துச் சென்றது. • இதேபோல், இருசக்கர வாகனத்தில் சென்ற மதியழகன் என்பவரையும், அந்தக் கும்பல் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. • இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, வழிப்பறியில் ஈடுபட்ட கபருதீன் மற்றும் விஷ்வா ஆகியோரை கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்