தற்போதைய செய்திகள்

கோயில் கும்பாபிஷேகத்திற்கு 14 வகை.. சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்.. பட்டாசு வெடிக்க, புழுதி பறக்க வந்திறங்கிய சீர்வரிசை..!

தந்தி டிவி

கோயில் கும்பாபிஷேகத்திற்கு 14 வகை.. சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்.. பட்டாசு வெடிக்க, புழுதி பறக்க வந்திறங்கிய சீர்வரிசை..!

புதுக்கோட்டை கீரமங்கலம் பட்டவையனார் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து கீரமங்கலம் மேலக்காடு பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், பள்ளிவாசலில் இருந்து பழங்கள், காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தியபடி நாட்டிய குதிரைகளின் நடனத்துடன், விண்ணதிரும் பட்டாசுகள் வெடிக்க, இஸ்லாமிய சிறுவர்கள் ஆட்டம் பாட்டமாக முன்னே செல்ல, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பட்டவையனார் கோயிலை வந்தடைந்தனர்.

இவர்களை இந்துக்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். தாங்கள் கொண்டு வந்த சீரை பாரம்பரிய முறைப்படி விழாதாரரிடம் இஸ்லாமியர்கள் அளித்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை