தற்போதைய செய்திகள்

சாலையோரம் சென்றவர்களை அசுர வேகத்தில் மோதிய லாரி.. 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

தந்தி டிவி

வைஷாலி மாவட்டம் டெசரி காவல் எல்லைக்குட்பட்ட சுல்தான்பூர் கிராமத்தில், பொதுமக்கள் சாலையோரம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி ஒன்று, அவர்கள் மீது மோதியது.

இதில், 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

பலர் படுகாயமடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்