தற்போதைய செய்திகள்

பூசாரிக்கே "விபூதி" அடித்த மர்ம ஆசாமிகள்..11 பவுன் தங்க நகைகள் "அம்பேல்"

தந்தி டிவி

நெல்லை ஆவரைக்குளம் முத்தாரம்மன் கோயிலில் அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியைத் திசை திருப்பி அம்மன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கோயிலுக்கு பக்தர்கள் வேடத்தில் வந்த மர்ம நபர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியை திசை திருப்பி உள்ளனர். அர்ச்சனைக்காக பூசாரி கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த போது, முத்தாரம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 11 பவுன் தங்க நகைகளுடன் அந்த ஆசாமிகள் தப்பி ஓடியுள்ளனர். கோயிலில் சிசிடிவி கேமரா செயல்படாமல் போனது திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்