தற்போதைய செய்திகள்

3 சிறுமிகளை மாறி மாறி சீரழித்த 11 பேர்..! சிக்கிய 3 சிறுவர்கள்... சென்னையை நடுநடுங்க வைத்த கொடூரம்

தந்தி டிவி

சென்னையை சேர்ந்த 18 வயது பெண், 17 வயதான தோழியுடன் தனது சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். இந்த இருவரும், சித்தப்பாவின் மகளான 17 வயது சிறுமியையும் அழைத்துக் கொண்டு வெளியில் ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளனர். அடிக்கடி 3 பேரும் வெளியே சென்றுவிட்டு, வெகுநேரமாகிய பின் வீட்டுக்கு வருவதால், உறவினரான சித்தப்பா மற்றும் அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களின் நடவடிக்கையை அந்த தம்பதி கண்காணித்து வந்தபோதுதான், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம், அவர்களின் காதுக்கு எட்டியது.

வழக்கம்போல 3 பேரும் வெளியே சென்ற நிலையில்,17 வயது சிறுமிகள் இருவரும், இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளனர். இதனைக் கண்டு கோபமடைந்த சிறுமியின் தந்தை, இரவு தாமதமாக வந்த காரணத்தை கேட்க, அந்த சிறுமிகள் மழுப்பலான பதிலை கூறிவிட்டு தப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இரவு 2 மணி அளவில் 18 வயது இளம்பெண் வீட்டிற்கு வரவே, அவரது சித்தப்பா மற்றும் சித்தி, எங்கு சென்றிருந்தாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர் கூறிய காரணம், உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறவே, உறவினர்கள் இருவரும் நடுங்கிப் போயினர்.

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கவே, போலீசார் இளம் பெண்ணிடம் நடந்த விவரங்களை கேட்டு, அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

பின்னர் நடத்திய விசாரணையில், 17 வயதான 2 சிறுமிகளும், 18 வயது இளம்பெண்ணையும் பழகுவதை பயன்படுத்திக் கொண்ட ஆண் நண்பர்கள், அவர்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, 2 சிறுமிகள் மற்றும் இளம்பெண்ணை பாலியல் வனகொடுமை செய்ததாக 17 வயது சிறுவர்கள் 3 பேர் உட்பட 1 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அதில் 8 பேர் புழல் சிறையிலும், சிறுவர்கள் 3 பேரை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..