தற்போதைய செய்திகள்

"திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடமாக்க வேண்டும்" - மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடமாக்குவது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள ஆயிரத்து 50 திருக்குறள்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என 2016ல் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அது பெயரளவில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் முறையாக நடைமுறைப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை 3 மாதங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS