தற்போதைய செய்திகள்

100 நாள் வேலை திட்ட கணக்கெடுப்பில் குளறுபடி... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தந்தி டிவி

100 நாள் வேலைத் திட்ட அட்டையில் ஏழைகளின் விவரம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த பதிவு நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்த சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகள் முற்றிலும் தவறாக இருப்பதாகவும் இதில் முறையாக ஏழைகளின் விபரங்களை பதிவு செய்யாமல் வசதி வாய்ப்பு உள்ளவர்களை பதிவு செய்து இருப்பதாகவும் குற்றம் சுமத்தி, மறு தரவு செய்து புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சிவகங்கை, காளையார் கோவில், முத்தூர், வானியங்குடியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்பெண்களைத் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். மனுவை பெற்று கொண்ட அவர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்