தற்போதைய செய்திகள்

10 ஆண்டுகள் நிறைவு - அதிரடி ஆஃபர் கொடுத்த Amazon

தந்தி டிவி

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் கால் பதித்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அதனை கொண்டாடும் வகையில் விற்பனையாளர் கட்டணத்தில் 10 சதவிகிதத்தை குறைத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் இந்தியாவில் சேவையை தொடங்கிய அமேசான் நிறுவனத்தில், நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் விற்பனையாளர்கள் உள்ளனர்.

தற்போது விற்பனையாளர்களுக்கான கட்டணம் 10 சதவிகிதம் குறைக்கப்பட்டதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. முதலில் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கிய அமேசான் நிறுவனம் இந்தியாவில் அமேசான் பே, பிரைம், அமேசான் ஃபுட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’