தற்போதைய செய்திகள்

"குவாட்டருக்கு 10ரூபாய் Extra எதற்கு..?"டாஸ்மாக் கடையில் வாக்குவாதம் -தீயாய் பரவும் பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

குன்றத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததை தட்டிக்கேட்ட மதுப்பிரியருக்கும், சூப்பர்வைசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையை அடுத்த குன்றத்தூர் ஆண்டால்குப்பத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், மது பானத்திற்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு மதுவாங்க சென்ற நபர், அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானத்தை வழங்க வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த டாஸ்மாக் சூப்பர்வைசர், பின்னர் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அரசு நிர்ணயித்த விலையில், மதுபானத்தை வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்