கர்நாடகா தேர்தல்

"தலையாய பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பது ஏன்?" - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி

தந்தி டிவி

பிரதமர் மோடி நாட்டின் தலையாய பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மூன்றரை ஆண்டுகளில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்பதை பிரதமரிடம் கேட்க விரும்புவதாக தெரிவித்த அவர், பணவீக்கம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச மறுப்பது ஏன்? என்றார். முன்னதாக ஹோஸ்கோட்டில் ஊர்வலமாக சென்ற அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CUET Exam | தாமதமான `CUET’ தேர்வு.. தொழில்நுட்ப கோளாறால் பரபரப்பு

Electric trains | Time Table | மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. புது அட்டவணை இதோ!

Tasmac Issue | மீண்டும் திறக்கப்பட்ட‌ டாஸ்மாக்.. தி.குன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

#BREAKING || Alangulam | தமிழகத்தையே உலுக்கிய ஆலங்குளம் சம்பவம்.. ட்ரோன் வைத்து தூக்கிய போலீசார்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஈபிஎஸ் வைத்த செக்மேட்