ஆரோக்கியம்

Niccotin Pouch | இதயத்திற்கே பேராபத்து.. ஆன்லைன்ல இந்த பவுச்ச வாங்காதீங்க - தமிழக அரசு எச்சரிக்கை

ஆன்லைன்ல இந்த பவுச்ச வாங்காதீங்க - தமிழக அரசு எச்சரிக்கை

thanthitv

இதயத்திற்கே பேராபத்து.. ஆன்லைன்ல இந்த பவுச்ச வாங்காதீங்க - தமிழக அரசு பரபரப்பு எச்சரிக்கை #niccotinpouch #tngovt #onlineshopping ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நிக்கோட்டின் பவுச் விற்க கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை சட்டவிரோதமாக ஆன்லைனில் விற்கப்படும் நிகோட்டின் பவுச்சுகள் குறித்து, ஆன்லைன் நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைனில் பல நிறுவனங்களில் நிகோட்டின் பவுச்சுகளை முறையான உரிமம் இன்றி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நிறுவனங்கள் பெயரில் உள்ள நிகோட்டின் பவுச்சுகள் உடல்நலத்திற்கு ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புகைப்பிடித்தலை நிறுத்த உதவும் என விளம்பரப்படுத்தப்பட்டாலும், இவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்படவில்லை என்றும், கட்டுப்பாடற்ற நிகோட்டின் வெளியேற்றம் இதயம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத இந்தப் பொருட்களை தயாரிப்பு, அல்லது விற்பனை செய்தால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்