தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2026)

thanthitv

தமிழ்நாட்டிற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை...

காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு பிற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்று மாநிலங்களவையில் ஜல் சக்தித்துறை அளித்த பதிலை திரும்பப் பெற வேண்டும்....

மேகதாது திட்டத்திற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்....

பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா மீது மக்களவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வருகிறது,..

தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா குறித்து, 10 மணி நேரம் வரை விவாதத்தை நீட்டிக்க அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்..

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பவரை மத்திய கல்வி அமைச்சராக பாஜக நியமித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடினார்.

பிரதமரின் இந்த நடவடிக்கை விசித்திரமானது என்றும், அமைச்சரவையில் பலர் இருக்கும்போது அவர்களில் ஒருவரை கல்வி அமைச்சராக நியமித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கைது உள்ளிட்ட எந்தவொரு கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு...

தடியடி சம்பவம் குறித்து பதிலளிக்குமாறு டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்...

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்