கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது..... அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று முதல்வர் விஜய் முன்மொழிந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்...திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு...
மேகதாது அணை விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் அமைக்க, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேரவையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்..
மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் சேர்க்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தல்....எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை தீர்மானத்தின் நான்காவது பத்தியில் சேர்க்க முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்த பின்னர் திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றம்..
மேகதாது தொடர்பான தமிழகத்தின் தீர்மானம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்ட பின் நடவடிக்கை எடுக்கப்படும்...தமிழக அரசு என்ன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை பார்க்க வேண்டும் எனவும், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்....
அரியலூர், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை...தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது...
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று, இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு...மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்..
விணாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது...மதியம் இரண்டு மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு...