தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது...234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்...
இன்று தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் வரும் ஏப்ரல் ஆறாம் தேதியுடன் நிறைவடைகிறது...ஏப்ரல் ஏழாம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது...
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்...2011 முதல் தொடர்ந்து மூன்று முறை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவர், தற்போது நான்காவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்...
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்...காரைக்குடியில் இன்று காலை 10 மணிக்கு சீமான் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்...
கேரள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்...ஒன்று ஊழல் கூட்டணி என்றால், மற்றொன்று மகா ஊழல் கூட்டணி என அவர் சாடியுள்ளார்...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சி 284 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது...பவானிப்பூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பிரதீப் பிரசாத் என்பவர் போட்டியிடுகிறார்...
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று தனது மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார்...கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளார்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது...220 என்ற இமாலய இலக்கை 19.1 ஓவரில் அடைந்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது...