தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv
  • சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 5 நாட்கள் முன்னதாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

  • தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 4 நாட்களில் 42 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்...2.37 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 20.80 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன...

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது...சூறைக்காறுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது...

  • திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது...

  • சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளுக்கு திமுக, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது...காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க., ஐ.யூ.எம்.எல்., மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...

  • தவெக எந்த கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் என தந்தி டிவியில் நேற்று முன்தினமே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது...

  • திமுக உடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்...தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் வெகு விரைவில் களத்திற்குச் செல்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தம்மிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்