LPG விவகாரத்தில் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது...ஆனால், இதுவரை தட்டுப்பாடு என்ற நிலையை எதிர்க்கொள்ளவில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை விளக்கம் அளித்துள்ளது...
சிலிண்டர் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் 12 ஆயிரம் இடங்களில் ரெய்டு...15 ஆயிரம் பதுக்கப்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது...
கச்சா எண்ணெய் இருப்பு போதுமானதாக உள்ளது...அனைத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் அதிக திறனில் இயங்குவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது...
தேர்தல் நடத்தை விதிகளை கூறி, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது...
தவெகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, தம்மை பற்றி கூறிய கருத்து உண்மைக்கு மாறானது என்று நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்...காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும் என்று ரஜினி கூறியுள்ளதால் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்...ரஜினி மீது எந்த வன்மமும் இல்லை, அன்பு மட்டும்தான் இருக்கிறது என விளக்கம்...
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார்...தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்...