தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv
  • தவெக அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...முதலமைச்சர் விஜய் பொது நிர்வாகம், உள்துறை, ஆட்சிப் பணி, காவல் பணிகளை கவனிக்கிறார்...நகராட்சி நிர்வாகம், இளைஞர் நலன் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளும், முதலமைச்சர் விஜய் வசமே உள்ளது..

  • தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது....பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மற்றும் சிறு பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

  • ஆட்சி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது....நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் படிகள் ஆகியவற்றை அவர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

  • அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித் துறையை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.....நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், மற்றும், முந்தைய ஆட்சியில் உதயநிதி வசமிருந்த விளையாட்டு மேம்பாட்டுத்துறையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...

  • திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்று அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு துறை ஒதுக்கப்பட்டுள்ளது....சட்டத்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்புப் பிரிவு, சட்டமன்றம் மற்றும் தேர்தல்கள் துறைகளும் அவர் வசம் உள்ளது...

  • முதல் முறை அமைச்சரான ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.....தொல்லியல் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரத்துறை, திரைப்படத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...

  • காரைக்குடியில் சீமானை வீழ்த்தி அமைச்சரான டி.கே. பிரபுவுக்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...

  • மயிலாப்பூரில் வெற்றி பெற்று அமைச்சரான வெங்கட்ரமணனுக்கு உணவு வழங்கல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது

  • நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்து கலந்துரையாடினார்...பாதுகாப்பு, விண்வெளித் துறை மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க இரு நாட்டுப் பிரதமர்கள் உறுதி அளித்தனர்...

PM Modi | Cholas | Netherlands | பிரதமர் மோடி கைக்கு வந்த 300 ஆண்டு பழமையான சோழர் காலத்து பொக்கிஷம்

DMK | MK Stalin | திமுகவில் அதிரடி மாற்றம் - நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Ravi Mohan | Arthi | Sujatha | "இதைப்பற்றி நான் பேசினால்..." - ஆர்த்தியின் தாய் சுஜாதா பதிலடி

BREAKING || "ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது" - CM விஜய்யின் அடுத்த அதிரடி

Breaking | Andhra CM | ``3வது குழந்தைக்கு ரூ.30,000..'' | 4வது குழந்தைக்கு எவ்வளவு தெரியுமா?