தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.05.2026)

thanthitv

சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது..

சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறார் முதல்வர் விஜய்...

சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

அதிமுகவில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, பெரும்பான்மை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி கூட்டாக அறிவித்துள்ளனர்...

தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்று தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்...

விஜய்க்கு ஆதரவாக சி.வி.சண்முகம் தரப்பும், எதிராக ஈபிஎஸ் தரப்பும் உள்ள நிலையில், அதிமுக கொறடா பொறுப்புக்கு கடும் போட்டி...

இருதரப்பும் கோரிக்கை வைப்பதால் முடிவு சபாநாயகர் கையில் உள்ளது...

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ., நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது...

திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

BREAKING || "அமமுக கூண்டோடு கலைப்பு" - ராம்நாட்டில் பரபரப்பு அறிவிப்பு

BREAKING || முதல்வரின் பாதுகப்பு வளையம் மீறப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் - வெளியான பரபரப்பு வீடியோ

Thirumavalavan | CM Vijay | CM விஜய், திருமா சந்திப்பு முடிந்த கையோடு விசிகவிலிருந்து கடும் கண்டனம்

BREAKING | CPM | TVK | CM VIJAY | "ஏற்புடையதல்ல.." - சிபிஎம் கடும் கண்டனம்

CM Vijay || "தவெகவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய புள்ளிகள்"- நாளை என்ன நடக்கும்?