தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை 3வது முறையாக சந்தித்த தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்....
பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை வழங்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது....
ஆட்சி அமைக்க அழைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு...
தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை, பெரும்பான்மை பட்டியலை கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மனுவில் குற்றச்சாட்டு...
தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது...
தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் விஜய்...
கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கே சென்று நன்றி கூறினார்..
மதவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் திமுகவுடன் தொடரும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன...
தவெகவுக்கு தருவது ஆதரவு மட்டுமே, கூட்டணி அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்..
ஆளுநர் மூலம் ஆட்சி நடத்த முயன்ற பாஜகவின் திட்டத்தை முறியடிக்க தவெகவிற்கு ஆதரவு அளித்ததாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன..
இரு கம்யூனிஸ்ட்களும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்..