ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...மழையின் காரணமாக போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், 213 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பெங்களூரு தோல்வி அடைந்தது...
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன...டெல்லியில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது...
திமுக, அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்...எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்..
தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இரண்டாவது முறையாக தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார்..40 நிமிட சந்திப்பில் பெரும்பான்மை குறித்து ஆளுநர் பல்வேறு விளக்கங்கள் கேட்டுள்ளார்...
2வது முறை சந்திப்புக்கு ஆளுநர்தான் அழைப்பு விடுத்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது..பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார்..மெஜாரிட்டி பெற முடியாத பட்சத்தில் அடுத்த நடவடிக்கை பற்றி பட்டினம்பாக்கம் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்..
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10ஆம் தேதி வரை சென்னையில் தங்க உத்தரவு...என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..