தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 06 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2026) | 06 AM Headlines | ThanthiTV

காலை 06 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2026)

Web Team - Thanthi TV

தமிழக சட்டமன்ற தேர்தல் - 4,902 வேட்புமனுக்கள் ஏற்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது...

7 ஆயிரத்து 600 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 902 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன...

2 ஆயிரத்து 347 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 11 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன...

ஈரானில் 2 வாரத்திற்கு போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வாரத்திற்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்...

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், இடைக்கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்...

போர்நிறுத்தம் - கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு நூறு டாலருக்கும் கீழே குறைந்தது...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - நாளை வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரேகட்டமாக நடைபெற உள்ளது...

நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன...

Iran War | போரை நிறுத்திய ஈரான், அமெரிக்கா - யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டிய பாகிஸ்தான்

Donald Trump | Iran | IranWar | நின்றது போர்.. திறக்கும் ஹார்முஸ்.. உலகிற்கே தீபாவளி

Donald Trump | Iran | ``தற்காலிக நிறுத்தம்'' - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.. பின்னணி என்ன?

BREAKING || மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || ஓய்ந்தது பிரசாரம்... புதுச்சேரியை ஆளப்போவது யார்? டிக் அடிக்க ரெடியாகும் மக்கள்