தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்..கடந்த செவ்வாய்கிழமையுடன் 16வது சட்டப்பேரவையின் காலம் நிறைவடைந்ததாக அவர் அறிவித்துள்ளார்..
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சியமைக்க, பொறுப்பு ஆளுநர் அர்லேகரிடம் உரிமை கோரினார் விஜய்...சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநரை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை வழங்கினார்...
கிண்டி ஆளுநர் மாளிகை வந்த தவெக தலைவர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது...விஜய்க்கு சால்வை அணிவித்த ஆளுநர் அர்லேகர், நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்....
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது...ஈபிஎஸ் முதலமைச்சராக, வெளியில் இருந்து ஆதரவளிக்க திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது...
ஆளுநர் அர்லேகருடன், ஆதவ் அர்ஜுனா மீண்டும் சந்திப்பு...ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் மீண்டும் சந்தித்து கோரிக்கை..
எந்த சூழ்நிலையிலும், தவெகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...அதிமுக ஆதரவு அளிப்பதாக பரவும் தகவல் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்..
விஜய்யின் பதவியேற்பு விழாவுக்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது...தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன...
நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முழுவதுமாக வெளியேறியது...தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் ஆதரவு வழங்கிய நிலையில் கூட்டணி முறிந்தது....