தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் அரை நூற்றாண்டிற்குப் பின்னர், மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது...களம் கண்ட முதல் தேர்தலிலேயே, இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக-வை வீழ்த்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது விஜய்யின் தவெக...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அலையால், திமுக ஆட்சியை இழந்தது...முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தோல்வியை தழுவினர்....
ஹாட்ரிக் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிட்ட முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்...தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, ஸ்டாலினை விட 8 ஆயிரத்து 795 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்...
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்...பெரம்பூர் தொகுதியில் 49 ஆயிரத்து 765 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 22 ஆயிரத்து 869 வாக்குகள் வித்தியாசத்திலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார்...
திமுக-வின் கோட்டை என்று கூறப்படும் சென்னையை களமிறங்கிய முதல் தேர்தலிலேயே தவெக கைப்பற்றியுள்ளது...மொத்தமுள்ள 16 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம்14 இடங்களை கைப்பற்றிய நிலையில் சேப்பாக்கம், துறைமுகம் என இரண்டு தொகுதிகளை மட்டும் திமுக தக்கவைத்துள்ளது...