தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2026)

thanthitv

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்...

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பீர்களா என்று முதல்வர் கேள்வி எழுப்பியதும், செய்வோம் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்....

திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகள் திட்டம், சூப்பர் டூப்பர் வாக்குறுதி என்று முதலமைச்சர் கூறினார்...

தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.....

என்.டி.ஏ. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றால், சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்........

அதிமுக-விடன் ஆட்சியை வழங்கினால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடமானம் வைத்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மூவாயிரத்து 40 ரூபாய் உயர்ந்துள்ளது.....

ஒரு கிராம் 14 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

சென்னையில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது....

ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்ந்துள்ளது...

வணிக சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 269 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை...

Iran War | Modi | மத்திய கிழக்கு போர் - `ராஜதந்திரத்தை’ கையில் எடுக்கும் பிரதமர் மோடி

Durai Murugan Case | அமைச்சர் துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கு.. சுப்ரீம்கோர்ட் பரபரப்பு உத்தரவு

TVK Vijay | Kolathur Campaign | ``நாளை திருச்சியிலும் கூட..'' | தவெகவினர் பரபரப்பு புகார்

Vijay | Amitshah | அமித்ஷாவுக்கு தவெக பரபரப்பு கடிதம் - `உள்ளே’ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

TVK Vijay Complaint | "விஜய் பிரசாரத்துக்கு பாதுகாப்பு இல்லை" - தவெக புகார் மனு