வெப்ப அலையிலிருந்து மக்களை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...மக்களை பாதுகாக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பம் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது...வரும் 1 மற்றும் 2 ஆம் தேதியிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது..
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சென்னையில் இளநீர் விலை நூறு ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.......போதிய விளைச்சல் இல்லாததும், தேவை அதிகரிப்புமே விலை உயரக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்...
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சென்னையில் இளநீர் விலை நூறு ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.......போதிய விளைச்சல் இல்லாததும், தேவை அதிகரிப்புமே விலை உயரக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்...
சிக்கிம் மாநிலத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்........பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி, 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைத்தார்..
நமது நாட்டில் அரசியல் நலன்களுக்காக மொழிப் பேரினவாதம், பிராந்தியவாதம், சாதிப் பாகுபாடு மற்றும் பிற பிரிவினைகளைத் தூண்டப்படுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.. 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்பதற்கு சிக்கிம் மாநிலம், ஓர் எழுச்சியூட்டும் முன்மாதிரியை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்..
தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்....தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்..