தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2026)| 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2026)

thanthitv
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது... இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உடனடியாக விண்ணப்பித்தால் மட்டுமே வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார்... ஏப்ரல் 21ஆம் தேதி தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்...

  • பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்... தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கேட்டு தவெக மனு அளித்திருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்...

  • புதுச்சேரியில் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது...திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் திரும்ப பெற போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது...

  • திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதற்கான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது... திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன் ஒரு மணி நேரம் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆலோசித்த நிலையில், இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது....

  • போட்டியிடும் தொகுதி குறித்து திமுக குழுவினருடன் மதிமுக தொகுதி பங்கீடு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்...திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

TTV Dhinakaran Case | TTV தினகரன் வழக்குகள் ரத்து.. ஹைகோர்ட் உத்தரவு

BREAKING || திடீரென பெட்ரோல் பங்க் ஓடிய மக்கள் - பரபரப்புக்கு நடுவே நாட்டுக்கே முக்கிய அறிவிப்பு

Breaking | High Court | Ponmudi | பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் முக்கிய உத்தரவு

Todays Gold Rate | சட்டென்று தலைகீழாக மாறிய தங்கம் விலை..

Teachers | “அரசியல் நிகழ்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்றால்’’ - பறந்து வந்த எச்சரிக்கை