தவெக-வின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, தம்மை பற்றி கூறிய கருத்து உண்மைக்கு மாறானது என்று நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.....காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும் என்று ரஜினி கூறியுள்ளதால் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
ஆதவ் அர்ஜுனாவின் அவதூறு கருத்தைக் கண்டித்தும், தமக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.....திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர் மற்றும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று ரஜினிகாந்த் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்....
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....என்.டி.ஏ. கூட்டணியில் விஜய் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது...
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியுள்ளது....புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.....
சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.....சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்....
தேர்தல் நடத்தை விதிகளை கூறி, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....