தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கும் நிலையில் மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் அந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, மற்றும் ஞாயிறு விடுமுறையில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்....
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....பல்வேறு ஊர்களில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து, தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது......50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், ஆவணம் இன்று கொண்டு செல்ல முடியாது என்று மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்....
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை மேம்பாலம் அருகே, தேர்தல் பறக்கும் படை சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...குமரன் சாலையில் பொள்ளாச்சியை சேர்ந்த நபரிடம் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள தமிழக - ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்...இரண்டு மாநில வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்....
நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாநில எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்...கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் எடுத்து வரப்பட்ட காங்கிரஸ் கட்சியின் கொடிகள் மற்றும் தொப்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
தமிழக - கேரள எல்லையான குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்......ஒன்பது சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்துவதால் எல்லைப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது....
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 5 கோடியே 69 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்....மார்ச் 26 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்...