கள்ள ஓட்டு மற்றும் போலி வாக்காளர்களை தடுக்க, வாக்குச் சாவடிகளில் பயோ மெட்ரிக் முறையை உருவாக்க கோரிய பொதுநல மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை...
தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு...
தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆலோசனை நடத்தினார்...
வாக்குப்பதிவு ஏற்பாடு, சட்டம் ஒழுங்கு சூழல், பிரசாரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது..
தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக தபால் வாக்குகளை பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.....
மூத்த குடிமக்கள், மாற்றுத்திற்னாளிகள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்...
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்...
ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பலப்படுத்த வியூகம் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவள்ளூரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.....
ராணிப்பேட்டையில் இரவு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்...