தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2026) | 6AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2026)

thanthitv

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக 750 கோடி ரூபாயில் 4 லட்சத்து 41 ஆயிரம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது...

22 காரட் ஹால்மார்க் தங்கத்தில், துல்லியமான எடை மற்றும் அளவில் மோதிரங்களைத் தயாரிக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளன...

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்...

ஆவின் பால் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும் பால்வளத்துறை ஆலோசனை கூட்டத்தில் அவர் அறிவுறுத்தியுள்ளார்..

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாளை மறுதினம் தொடங்க உள்ளது...

பொதுமக்கள் ஆன்லைன் முறையில் தரவுகளை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது...

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்...

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய பணியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்....

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆயிரத்து 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது...

BREAKING ||சதுரகிரியில் பெரும் சோகம்... சாமியை பார்த்துவிட்டு இறங்கியபோது நடக்க கூடாத விபரீதம்

EV Charging Station | TN Govt |"20,000 EV பொது சார்ஜிங் நிலையங்கள்.." - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு

TN Heat | 26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புரட்டியெடுத்த வெயில் - தமிழ்நாட்டிலேயே ஹாட் ஸ்பாட் இதுதான்

Election Commission | குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதிரடி

"பாக்கெட்களுக்கு பதிலாக.."