தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார், அமைச்சர் மரியவில்சன்...தமிழகத்தின் மொத்த கடன், கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 10 லட்சம் கோடியாக இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்...
தமிழ்நாட்டின் உண்மையான கடன் 13.18 லட்சம் கோடி ரூபாய் என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..மாநில அரசின் கடன் 10 லட்சம் கோடி, பொதுத்துறை நிறுவனக் கடன் 3.18 லட்சம் கோடி என்று கூறப்பட்டுள்ளது..
கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...முதலில் 50,000 வரை கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்ட நிலையில் கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது....
தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, சிறு குறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்...பெரு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
ஏற்கனவே திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பை, பெருந்துறை தொகுதிகள் காலியாக உள்ளன...தற்போது விராலிமலையுடன் சேர்த்து மொத்தம் 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது..
அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்...இது ஒரு முடிவு அல்ல தொடக்கம் என்றும் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்..
ஜி7 மாநாட்டில் மரியாதை நிமித்தமாக டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி இன்று டிரம்புடன் தனியாக ஆலோசனை மேற்கொள்கிறார்...இந்திய நேரப்படி மாலை 6.15 மணியளவில் சந்திப்பு நடைபெற உள்ளது...