தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 லட்சத்து 61 ஆயிரம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது தேர்தல் அலுவலர்கள் 2.88 லட்சம் பேர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1.73 லட்சம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் காலை 8.30 மணி முதல் ஈவிஎம்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேற்குவங்க 2ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
மேற்குவங்கத்தில் பிரசார பொதுக்கூட்டதிற்கு சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மித்தாலியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக-வினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக திரிணாமுல் எம்.பி. மித்தாலி குற்றஞ்சாட்டி உள்ளார்...