பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியது...
இந்தியாவின் நெற்றியில் இருக்கும் திலகம் மாதிரி மாதிரி தான் தமிழ்நாடு என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.....
தமிழுக்கு ஒன்று என்றால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்....
தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதில் தவெக அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது என்று முதலமைச்சர் விஜய் உறுதி....
தமிழ் தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும்....
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்களின் பொது அடையாளம் என்றும் பெருமிதம்....
மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்...
முதலிடத்தில் விழுப்புரத்தை சேர்ந்த வேங்கடபதியும், 2வது இடத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீநிகாவும் உள்ளனர்...
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 13-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்...
சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் 7.5 விழுக்காட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு மட்டும், நேரடியாக சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளார்...