தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26.07.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26.07.2026)

thanthitv

அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்...

4 பேரும் வரும் 30ம் தேதி நேரில் வந்து கூடுதல் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்...

வேலூர் விமான நிலையத்தை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்...

வேலூர் மக்களுடன் சேர்ந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட அவர், விவசாயத்தைப் போற்றும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக - தமிழக எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்...

100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த கன்னட போலீசார், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகாவுக்குள் அனுமதித்தனர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, காதலிக்க மறுத்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

படுகாயமடைந்த மாணவி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பிடித்த விசைப்படகு, முழுவதும் எரிந்து கடலில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலும் எரிந்து கடலில் மூழ்கிய நிலையில், மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்

TN Govt | ``அவகாசம்'' - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு