பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததை அடுத்து, ஏகனாபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...
இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...
பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவது தவறான முடிவு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
மாற்று இடங்களை பரிசீலித்த பின்புதான் பரந்தூரை தேர்வு செய்தோம் என கூறியுள்ள அவர், அரசியல் காரணத்திற்காக தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்...
புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்...
சென்னைக்கு 2வது விமான நிலையம் அவசியம் என்றும், புதிய விமான நிலையம் இல்லையெனில் வளர்ச்சி பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்...
சென்னையின் 2-ஆவது விமான நிலையத்திற்கான புதிய இடத்தை அரசு விரைவாகத் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்...
புதிய இடத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்...
கடந்த ஆட்சியில் கல்லூரிகளின் தரம் மேம்படுத்தப்படவில்லை எனக்கூறிய அமைச்சர் மரிய வில்சன், எண்ணிக்கையா?, தரமா? என்றால் தரம் தான் முக்கியம் என்றார்...
முந்தைய ஆட்சியில் கல்வி துறையில் கட்டாயப்படுத்தி பணம் வாங்கினர், அதற்கு நானே சாட்சி எனவும் அவர் குற்றம்சாட்டினார்...