சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.....
ஒரு கிராம் 14 ஆயிரத்து 250 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது....
ஆம்னி பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு பகுதியில் தனியார் ஆம்னி பேருந்து கார் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்...
பெங்களூருவில் இருந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த போது நிகழ்ந்த விபத்தில், படுகாயமடைந்த் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
சட்டமன்ற தேர்தல் - 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சட்டமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன...
நாளை வரை 11 ஆயிரத்து 323 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..
234 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், கூடுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.....
234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...